கருத்துரை நிகழ்ச்சி – 13.03.2019

Print Friendly, PDF & Email

ஈரோடு சிக்கய்ய நாய்க்கர் கல்லூரித் தமிழ்த்துறை திராவிட இயக்க ஆய்வு மய்யத்தின் சார்பில் 13.03.2019 இரண்டாவது நிகழ்வு நடைபெற்றது. இந்தியச் சமூகப் புரட்சியில் திராவிட இயக்கத்தின் கொடை எனும் தலைப்பில் நடந்த கருத்துரை நிகழ்ச்சிக்கு தொழில் மேலாண்மைத் துறைத்தலைவர் பேரா.சு.சுப்பிரமணியம் தலைமை வகித்தார். முனைவர் ப.கமலக்கண்ணன், தமிழ்த்துறைத் தலைவர் வரவேற்புரையாற்றினார்.
சிறப்பு விருந்தினர் முனைவர் க.நெடுஞ்செழியன் எண்பது நிமிடங்கள் தமிழகத்தில் திராவிட இயக்கம் நடத்திய சமுதாயப் புரட்சிகள் குறித்தும் திராவிட இயக்கம் இந்திய அளவில் ஏற்படுத்திய தாக்கங்கள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார். பகுத்தாறிவாளர் கழக மாநாடு, திராவிட இயக்க மாநாடுகளில் பெண் நலம், பெண்ணியம் போற்றப்பட்டதை பெருமையோடு எடுத்துரைத்தார். குழந்தை மணக் கொடுமை, விதவை மறுமணம் மறுப்பு, புரோகிதர்களின் புரட்டு, திருமணத்தில் புகுத்தப்பட்ட மூடநம்பிக்கைகள் ஆகிய பல்வேறு திராவிட இயக்கச் சிந்தனைகளைக் கருத்துரைத்தார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள், பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் செ.சதீஸ்குமார், பாரதியார் பல்கலைக்கழக முதுநிலை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் த.கண்ணன், திராவிட கழக முன்னோடிகள் பேரா.காளிமுத்து,திரு.சண்முகம், மற்றும் அலுவலகப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் விழா சிறக்க ஏற்பாடுகள் செய்த ஆய்வு மாணவர்கள், இளங்கலை மாணவ, மாணவிகளுக்கும் பாராட்டுகள்! நன்றிகள்.!

 

 

உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்.....

Leave a Reply

Your email address will not be published.