குழந்தைப் பாடல்களில் மண்ணும் மனித உறவுகளும் – முனைவர் சி.அங்கயற்கண்ணி

Print Friendly, PDF & Email

குழந்தைப் பாடல்களில் மண்ணும் மனித உறவுகளும்

முனைவர் சி.அங்கயற்கண்ணி

இணைப் பேராசிரியர் மற்றும் தமிழ்த்துறை

சிக்கய்ய நாய்க்கர் கல்லூரி

ஈரோடு.

தமிழர் தம் வாழ்வியலுக்கும் அவர்தம் இலக்கிய வயலுக்கும் உள்ள வரம்பினை விளக்கமுற வடித்தக் காட்டும் தொன்மை இலக்கண ஏடாம் தொல்காப்பியம் இலக்கியத்தில் பயின்று வரும் பொருள்களை முதல், கரு, உரி என மூவகையாகப் படுத்துக் காட்டுகிறது.

    இயற்கை என்பது புலன்கள் வழி நுகரப்படுவது. அது

    மனிதனோ அவனால் ஆக்கப்படும் பொருளோ அல்ல!

                 எனத் தனி நாயக அடிகள் இயற்கை குறித்து வழங்கும் விளக்கம் ஏற்படைத்தாக உள்ளது. எனவே மனிதன் நீங்கலான விலங்கு, பறவை, மரம், செடி, கொடி, ஞாயிறு, திங்கள் – வானம், விண்மீன், மலை, மழை, நிலம், நீர், தீ, காற்று ஆகிய அனைத்தும் இயற்கை என்பதில் அடங்கும்.

குழந்தைப் பாடல்களில் காணப்படும் பாடங் பொருண்மைகள் இயற்கை உலகம், மக்கள் உலகம் என்றும் இரு பெரும் வகைப்பாட்டிற்குப் பெரிதும் பொருந்துகின்றது. குழந்தைப் பாடல்களின் பாடுபொருள் வரையறைக்குட்பட்டது. குழந்தைகளின் இயல்பிற்கும் அறிவிற்கும் ஏற்புடைய பொருள்களே பாடு பொருளாகும் பான்மையுடையன. இத்திறம் கொண்ட பாடுபொருள் வரிசையில் சிறப்பிடம் பெறுவது இயற்கை.

உலகத்தோடு குழந்தைகள் பழகுவதற்கு இன்றியமையாத அன்புணர்வை உயிரினங்கள் பற்றிய பாடல்கள் குழந்தைகளுக்குக் கற்றுத் தருகின்றன. உயிரினங்களிடம் குழந்தைகள் அன்பு காட்டலும், அவற்றிடமிருந்து அன்பைப் பெறுதலுமாகிய இவ்வன்புப் பரிமாற்றத்தை விளக்க, கவிஞர்கள் அகிம்சை நெறியையும் குழந்தைகளுக்கு அறிவுறுத்துகின்றார்கள் எனவும் கொள்ளலாம்.

குழந்தைப் பாடல்களில் உயிரினங்களுக்குத் தனியிடம் உண்டு. குழந்தைகளுக்கு அவர்களைச் சுற்றியுள்ள பொருள்கள் அனைத்தும் புதுமையானவை. அழகுள்ளவை எனவே கவிஞர்கள் அந்தப் பொருள்களைக் கற்பனை கலந்து விளக்கிப் பாடினால் குழந்தைகள் அவற்றை எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். இயற்கை, அழகு, உலகியல் குறித்த அறிவைக் குழந்தைகளிடம் உருவாக்க இம்முறை கையாளப்படுகிறது.

சிற்றூர், பேரூர், பட்டணம் ஆகியவற்றைப் பற்றித் தனித்தனியே வர்ணிக்கும் பாடல்களை இளைஞர் இலக்கியத்தில் பாவேந்தர் இணைத்துள்ளார்.

 “கம்பும் தினையும் கேழ்வரகும்

கட்டித் தயிரும் சம்பாவும்

 கொம்பில் பழுத்த கொய்யாமா

      குலையில் பழுத்த வாழையுடன்

            ————————————————–

 நம்பிப் பெறலாம் சிற்றூரில்

                   நாயும் குதிரை போலிருக்கும்” ……1

                இவற்றில் இளல்பான வர்ணனைச் சுவை மேலோங்கி நிற்கின்றது. சிற்றூர்களில் நாய்களே குதிரைகள் போல் கம்பீர நடைபோடும் என்ற உவமை மிகவும் இனிமையானது.

ஒரு நாட்டின் இயற்கை வளத்திற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்வது காடு. குழந்தைக் கவிஞர்கள் இக்காட்டின் சிறப்புணர்ந்து பாடல்கள் படைத்துள்ளனர்.

         “கனத்த மழை தரும் கருவாக்கி

             நிலக்கரி தோண்டி ஈடுப்பதற்கும்

                            நிலத்தின் அரிப்பைத் தடுப்பதற்கும்” …..2

காட்டினாலே அரசினுக்குக்

      கணக்கில்லாத இலாபமாம்

     நாட்டில் உள்ள துன்பமோட

                         நாடும் பொருளும் உதவுமாம்” ……..3 

                காடு மழை பெய்வதற்கும், தாதுப் பொருட்கள் போன்ற அரிய பொருட்களை வழங்குகின்றன என்றும் அறிவியல் உண்மைகளை குழந்தைகளுக்கு பாடல்களின் வாயிலாக எடுத்துரைத்துள்ளார்கள் கவிஞர்கள். குழந்தைகளுக்கு விருப்பிமான இனிய பழங்களும், உடல் நலத்திற்கு கந்த காய்கறி வகைகளும் – தோட்டத்தால் மக்கள் எய்தும் பயன்பாடும் பாடல்களில் பரக்கப் பேசப்பட்டுள்ளது.

                 “தோட்டம் நல்ல தோட்டம் – நம்மைச்

                  சொக்க வைக்கம் தோட்டம்

                  —————————————————

                   தின்னத்தின்னப் பழங்கள் – மேலும்

                      தின்னக் கொடுக்கும் மரங்கள்;”  …..4

                இயற்கையின் ஒப்பில்லாச் சிறப்பினை உணர்த்தி நிற்கும் கூறுகளில் மலை குறிக்கத்தக்கது. இத்தகு மலையின் பெருமைதனைக் குழந்தைகளுக்கு பாடல்கள் மூலம் எடுத்துரைக்கின்றனர் கவிஞர்கள்.

                          “அண்ணாந்து பார்த்தாகம் மலையே – உன்

                   அடிதான் தெரியும் என் கண்ணில்”….5

           “தொலைவில் நின்றே பார்த்தாலும்;

             தூய தோற்றம் தந்திடுமாம்;”  …..6

                ஊரின் செழுமைக்கு இன்றியமையாதது ஆறு. ஆறில்லா ஊருக்கு அழகு பாழ்” – என்பது பழமொழி. இத்தகு ஆற்றின் சிறப்பினை குழந்தைகள் அறிய இத்தகைய பாடல்கள் துணைபுரிகின்றன.

                                      “கல்லும் மயலயம் குதித்து வந்தேன் – பெருங்

            காடும் செடியும் நடந்து வந்தேன்

                —————————————————-

                           மாங்கனி தேங்கனி வாரி வந்தேன் – நல்ல

                        வாச மலர்களுக்கு அற்றி வந்தேன்;”  …..7

                மக்கள் நீந்தி மகழிதல், ஊருக்கு அழகூட்டல் நஞ்சை நிலங்கள், புஞ்சைக் காடுகள் – பொழில்கள் ஆகியவற்றைச் செழிக்கச் செய்தால் அணைக்கட்டுகளுக்கு நீர் வழங்கல் பல்வேறு ஆற்றின் பயன்கள் குழந்தைகளுக்கு விளக்கப்பட்டுள்ளன.

நீர்நிலைகளில் மிகவும் பெரியது கடல் இதனைக் காணும் வாய்ப்பு எல்லாக் குழந்தைகளுக்கும் கிடைப்பதில்லை. அதனைக் காண வேண்டும் என்கிற ஆர்வம் எல்லாக் குழந்தைகளுக்கும் உண்டு.

                       “எல்லை அறியாப் பெருங்கடலே – நீ தான்

            இரவும் உறங்பாயோ? கடலே”….9

                                      “கண்ணுக் கெட்டும் தூரம் வரையில்;

                 எங்கும் நீர் மயம்;”  …..10

என்று கடலின் பரந்துப்பட்ட காட்சியமைக் கவிஞர்களின் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.

வாழையடி வாழையாக வளர்ந்து நிலைத்து வரும் குடிப் பெருமைகளை உயர்த்திடும் மக்கட்பேற்றைப் தமிழர்கள் மிகவும் விரும்பினர். பொருளொடு புணர்ந்த பக்கம் என்பதற்கு இளம்பூரணர் உரை கூறுமிடத்து புதல்வர்பேறும் கொள்க என்று குறிப்பிடுவதால் புதல்வர் பேற்றின் அருமையை உணரலாம். கணவனும் மனைவியுமாக உரிமை பூண்டு வாழும் அன்பு வாழ்க்கையின் மணிமுடியாகத் திகழ்வது குழந்தைச் செல்வமாகும்.

குழந்தையை ஈன்று புறந்தருதலைத் தம் தலையாய கடனாகக் கொண்டனர் மகளிர். இதனாலேயே வள்ளுவர் தம் குறளில்

                                     “மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்

               நன்கலம் நன்மக்கட் பேறு” 

                என்று கூறியுள்ளார். மேலும் பண்டைய இலக்கியங்களில் குழந்தை ஆணாயின் புறசட செயல்பாடுகளாலும் இணைத்து பேசப்படுகிறது.

சங்க இலக்கியங்களில் குழந்தையைக் குறிக்க பல்வேறு சொல்லாடல்கள் இடம் பெற்றுள்ளன. குழவி, புதல்வன், புதல்வர், மக்கள், மகள், மகன், மகவு, சிறுவன், சிறுமி போன்ற சொற்கள் வழங்கப்பட்டுள்ளன.

குழந்தைகள் இளமைக் காலந்தொட்டே கண்டிப்புடன் இருந்துள்ளனர். குழந்தை நலங்கருதி உணவூட்ட முற்படுங்கால் அது உண்ண மறுக்கையில் அச்சுறுத்தும் வகையில் கையில் கோல் கொண்டு ஒச்சுவதும் உண்டு. புலி வருகிறது என்று சொல்லி குழந்தையை அச்சுறுத்தலையும், குழந்தையின் அழுகையைப் போக்க அப்புலி காட்டலையும், குழந்தையுடன் விளையாட அம்புலியை விளித்து அழைத்தலையும் செய்தனர்.

இவ்வாறு குழந்தையின் வளர்ப்பு, அதன் செயல்பாடுகள், உறவு முறைகள், எப்படியெலாம் பன்முக பரிமாணங்களைக் கொண்டிருக்கிறது என்பதனை இல்க்கியங்களின் வழியாக அறிய முடிகிறது.

குறிப்புகள் :

  1. பெ.தூரன், சிறுவர் இலக்கியம், ப.347.
  2. அழ.வள்ளியப்பா, புத்தர் வழி, ப.1-2
  3. பாவேந்தர், இசையமுது தொகுதிகள் 1,2.
  4. திருவள்ளுவர், திருக்குறள் – 60
  5. புறநானூறு, பாடல் 312.

—–

உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்.....

Leave a Reply

Your email address will not be published.