சிறுவர்க்கு!

Print Friendly, PDF & Email

வைகறையில் விழித்து விடு – இன்றேல்
சோம்பல் உனை முத்தமிடும்
துட்டரைக் கண்டால் விலகிவிடு-இன்றேல்
எட்டப்பன் என்றே ஊர் தூற்றும்
ஏழ்மைக்கு என்றும் மதிப்புக் கொடு- இன்றேல்
தாழ்மை உனை மிதித்துவிடும்
அன்புக்கு என்றும் வளைந்து கொடு – இன்றேல்
வன்பு உன் வாழ்வை குலைத்துவிடும்
சோதனை என்றால் துணிந்து விடு-இன்றேல்
சாதனை விலகி உதிர்ந்து விடும்.

-ப.கமலக்கண்ணன்

உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்.....

Leave a Reply

Your email address will not be published.