தமிழரின் இசையும் நாடகமும் – 22.02.2020-முதல் பகுதி

Print Friendly, PDF & Email

ஈரோடு சிக்கய்ய நாய்க்கர் கல்லூரித் தமிழ்த்துறை, பாரதியார் பல்கலைக்கழக முதுகலைப்பட்ட மேற்படிப்பு விரிவாக்கம் மற்றும் ஆராய்ச்சி மையம் தமிழ்த்துறை மற்றும் பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரி இணைந்து 22.02.2020 சனிக்கிழமையன்று தமிழரின் இசையும் நாடகமும் என்ற பொருண்மையில் பண்பாட்டுக் கருத்தரங்கம் நாடகம், இசை என்று இரண்டு நிகழ்வுகளாக நடைபெற்றன. நாடக நிகழ்வில் சிக்கய்ய நாய்க்கர் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ப.கமலக்கண்ணன் அவர்கள் சிறப்பு விருந்தினர்களை வரவேற்றுப் பேசினார். கல்லூரியின் முதல்வர்(பொ) முனைவர் கு.உதயகுமார் அவர்கள் தலைமையுரையாற்றினார். சிறப்பு விருந்தினராக தஞ்சை பல்கலைக்கழகம் ஓய்வுபெற்ற மேனாள் நாடகத்துறைத் தலைவர் பேராசிரியர் மு.இராமசுவாமி அவர்கள் குறித்த அறிமுகத்தை தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் பேரா.க.இராக்கு வழங்கினார். சிறப்பு விருந்தினர் பேராசிரியர் மு.இராமசுவாமி ‘தமிழரின் இசையும் நாடகமும்’ என்ற ஆய்வுக்கோவையை வெளியிட்டு “தொல்காப்பியர் காலம் தொட்டு நாடகம் உருவான விதம், காப்பியங்களில் குறிப்பாக சிலப்பதிகாரத்தில் நாடகப் பாங்கு அமைந்த விதம், தற்காலத் திரைப்படத்தின் போக்கு குறித்தும், நாடகம் என்பது முரண்பாடுகளின் வடிவம், திரைப்படத்திற்கும் நாடகத்திற்கும் தொடர்பு ஏதுமில்லை என்பதையும் அன்றாட வாழ்வில் நிகழும் நிகழ்வுகளே நாடகத்திற்கான கூறுகள் எனவும் பேசினார். முடிவில் பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் செ.சதீஸ்குமார் அவர்கள் நன்றி கூறினார். இரண்டாம் நிகழ்வாக தமிழரின் இசை அரங்கமாக அமைந்தது. சிக்கய்ய நாய்க்கர் கல்லூரித் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் இரா.விஸ்வநாதன் அவர்கள் வரவேற்பு பேசினார். பாரதியார் பல்கலைக்கழக முதுகலைப்பட்ட மேற்படிப்பு விரிவாக்கம் மற்றும் ஆராய்ச்சி மையம் இயக்குநர் (பொ) முனைவர் து.கலாமணி அவர்கள் தலையுரையாற்றினார். பாரதியார் பல்கலைக்கழக முதுகலைப்பட்ட மேற்படிப்பு விரிவாக்கம் மற்றும் ஆராய்ச்சி மையத் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் இரா.மல்லிகா அவர்கள் சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்து வைத்தார். சிறப்பு விருந்தினராக திரைப்படப் பாடகர் செல்லக்குப்பம் மு.சுப்பிரமணி, இசைக்கலைஞர்கள் கலைச்செம்மல் க.சாமு, அமர்நாத் ஆகியோர்கள் மூவரும் இணைந்து நாட்டார் பாடல்களை இசையோடு பாடியும், மாணவகளுக்குப் பயிற்சி
யும் அளித்தனார். நாட்டார் பாடல்கள் உருவான விதம் குறித்தம், அத்தகைய பாடல்கள் எவ்வாறெல்லாம் பல்வேறு பரிமாணங்களில் மக்களிடம் சென்றடைந்தது என்பது குறித்தும் எடுத்து கூறினர். மேலும் கட்டுரையாளர்களுக்குச் சான்றிதழ்களும் ஆய்வுக்கோவைகளும் வழங்கப்பட்டன. இறுதியாக சிக்கய்ய நாய்க்கர் கல்லூரித் தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் முனைவர் சி.அங்கயற்கண்ணி அவர்கள் நன்றி கூறினார். நிகழ்வில் சிக்கய்ய நாய்க்கர் கல்லூரித் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் பேரா.மு.சதீஸ்குமார் அவர்கள் நிகழ்ச்சித் தொகுத்து வழங்கினார். சிக்கய்ய நாய்க்கர் கல்லூரியின் பிறதுறைப் பேராசிரியர்கள், பாரதியார் பாரதியார் பல்கலைக்கழக முதுகலைப் பட்டமேற்படிப்பு விரிவாக்கம் மற்றும் ஆராய்;ச்சி மையம் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர்கள் முனைவர் த.கண்ணன், முனைவர் நடராஜன், ஸ்ரீ வாசவி கல்லூரித் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் அ.குருமூர்த்தி, சிவகிரி பாரதியார் பல்கலைக்கழக கலை அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் பேரா.தாமோதிரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளைச் சிக்கய்ய நாய்க்கர் கல்லூரித் தமிழ்த்துறை ஆய்வு மாணவர்கள், மாணவ மாணவிகள் செய்திருந்தனர்.

 

 

 

உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்.....

Leave a Reply

Your email address will not be published.