தமிழர் பண்பாட்டு மரபுகளும் சடங்குகளும் – 30.09.2019

Print Friendly, PDF & Email

30.09.2019 இன்று தமிழர் பண்பாட்டு மரபுகளும் சடங்குகளும் என்னும் பொருண்மையிலான கருத்தரங்கம் சிக்கய்ய நாயக்கர் கல்லூரித் தமிழ்த்துறை வழி நிகழ்ந்தது. கருத்தரங்கின் ஆய்வாளராகத் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித் துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் இரா குறிஞ்சி வேந்தன் அவர்கள் கலந்துகொண்டு
தமிழர் பண்பாட்டு மரபுகளை ஆய்வுரையாக வழங்கினார். தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ப. கமலக்கண்ணன் ஐயா அவர்கள் வரவேற்புரை ஆற்ற
குறிஞ்சி வேந்தன் அவர்கள் ஆய்வுக் கோவையை வெளியிட்டு ஆய்வுரை நிகழ்த்தினார்.
தமிழ்த்துறைப் பேராசிரியர்களும் பிற துறைப் பேராசிரியர்களும் ஆய்வு மாணவர்களும் தமிழ் இளங்கலை பட்ட மாணவர்களும் கலந்துகொண்டு ஆய்வுரை கேட்டுப் பயன் பெற்றனர். இறுதியாக அழைப்புப் பேராசிரியர் மு.சதீஸ்குமார் நன்றியுரை பேசினார்.

 

 

 

 

 

உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்.....

Leave a Reply

Your email address will not be published.