தமிழ் இலக்கிய மன்ற நிறைவு விழா – 16.03.2018

Print Friendly, PDF & Email

16.03.2018 – ஈரோடு சிக்கய்ய நாய்க்கர் கல்லூரித் தமிழ்த்துறையின் சார்பில் நடைபெற்ற தமிழ் இலக்கிய மன்ற நிறைவு விழாவில் ‘மொழி – இனம் – மண்’ என்னும் தலைப்பில் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் இணைப்பேராசிரியர் & தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் ப.கமலக்கண்ணன் முன்னிலை உரையாற்றினார்.
முதல்வர் (பொ) பேரா.சு.சுப்பிரமணியம் தலைமை வகித்தார்.
தமிழ் இலக்கிய மன்ற அமைப்பாளர் முனைவர். ந.மணிகண்டன், வரவேற்புரையாற்றினார். முனைவர்.அர.ஜோதிமணி, நன்றியுரை கூறினார்.மேலும் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள்
முனைவர்சி .அங்கயற்கண்ணி, முனைவர் சா.சிவமணி,
பேரா.க.இராக்கு, முனைவர்.இரா.விஸ்வநாதன், அழைப்புப் பேராசிரியர் ஆ.அழகேசன் மற்றும் கல்லூரியின் பிறதுறைப் பேராசியர்கள் & முனைவர் பட்ட ஆய்வாளர்கள், ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வாளர்கள் தமிழ்த்துறை மாணவ, மாணவிகள், பிறதுறை மாணவ, மாணவிகள் பலர் பங்கேற்றனர். முன்னதாக தமிழ் இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும், பாரதியார் பல்கலைக்கழக தேர்வில் முதலிடம் பெற்ற மாணவ மாணவிகளுக்குப் பரிசும் பாராட்டும் வழங்கப்பட்டன…

உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்.....

Leave a Reply

Your email address will not be published.