திராவிட இயக்கக்கவிஞர்களின் வரலாற்றுச்சுவடுகள்

Print Friendly, PDF & Email

திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளான சாதி ஒழிப்பு மத எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, மனித நேயம் பேணல், ஆதிக்க எதிர்ப்பு,  பெண் விடுதலை, தமிழுக்கு அனைத்துத் துறைகளிலும் முதலிடம் இந்தி எதிர்ப்பு என பல்வேறு மானுடச் சிந்தனைகளை   திராவிட இயக்கம் முன் வைத்தது. தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோரின் தலைமை மீது ஈர்ப்பும் கொள்கை பற்றும் கொண்ட கவிஞர்கள் நாளடைவில் திராவிட இயக்கக்  கவிஞர்கள் இனங் காணப்பட்டனர். இவர்களின் கவித்துவச் சாதனைகள் அனைத்தும் சரித்திரச் சாதனைகளாகும்….

       1.              பெயர்;  அரங்கசாமி 22.07.1915
              புனைபெயர்;  கவிரேறு,பாவலர்,வாணிதாசன்
                           ஊர் ; புதுவை
படைத்துள்ள கவிதை நூல்கள்;
               இரவு வரவில்லை,இனிக்கும் பாட்டு, இன்ப இலக்கியம், எழிலோவியம்,எழில்விருத்தம்,கொடிமுல்லை,தமிழச்சி,சிரித்தநிலா,தொடுவானம்,தீர்த்த யாத்திரை, பாட்டுப் பிறக்குமடா,பாட்டரங்கப் பாடல்கள்,பொங்கல் பரிசு,வாணிதாசன்  கவிதைகள். திராவிட நாடு
இதழில்  இவர் எழுதிய கவிதையின் தலைப்பு “விதவைக்கொரு
செய்தி”என்பதாகும்.இவரின் கவிதை நடை,கவிதை வளம் என்பது
பாவேந்தரின் ஓசையின்பத்தை அடியோற்றி அமைந்துள்ளது.
வாணிதாசன் தமது  கவிதைகள் மூலம் இன உணர்வையும்
மொழியுணர்வையும் ஊட்டியுள்ளரர்.
          2.            பெயர்;   இராச கோபாலன்    23.11.1921
               புனைபெயர்;  சுரதா
                            ஊர் ;  புதுவை
படைத்துள்ள கவிதை நூல்கள்;
             உவமைக் கவிஞர், கவிமாமன்ன்ர், கவிஞர் திலகம், என பல சிறப்புகள்  பெற்றவர்.உதட்டில் உதடு, சுவரும்  சுண்ணாம்பும்,சாவின் முத்தம்,பட்டத்தரசி,அமுதும் தேனும், தேன் மழை, துறைமுகம் போன்றவை   இவருடைய படைப்புகள்.சிறந்த திரைப் பாடல்களின் ஆசிரியர்  பாவேந்தரின் தலைமை மாணாக்கருள் ஒருவர்.இவரது முதல் கவிதை சிரிப்பின் நிழல் என்பதாகும்.
 3.                    பெயர்;  கருணாநிதி.மு 03.06.1924

              புனைபெயர்;  கருணா,கலைஞர்
                           ஊர் ; திருக்குவளை,திருவாரூர்  மாவட்டம்
படைத்துள்ள கவிதை நூல்கள்;
                  கவியரங்கக் கவிதைகள்,கலைஞரின் கவிதைகள்.அண்ணா + பாரதிதாசன் = கருணாநிதி என்று தமிழறிஞர் தமிழண்ணல் குறிப்படுகிறார். பள்ளிப்பருவத்தில் “மாணவர் நேசன்” என்ற கையெழுத்து மாத இதழை நடத்தினார்.கலைஞர் அவர்கள் பெரியார்,அண்ணா வழிக்காட்டலில் வளர்ந்தவர்.படிக்கும் காலத்தே மாணவர்களை ஒன்றினைத்து இந்தி எதிர்ப்புப் பேரணிகளை 1938 ஆம் கால காட்டத்திலேயே நடத்தியவர். கவிதையல்ல.அண்ணா கவியரங்ககம் , கவியரங்கில் கலைஞர், கலைஞரின் கவிதைகள்,வாழ்வென்னும் பாதையில் போன்ற நூல்கள்களைப்
படைத்தவர்.இவரது கவிதைகள் கடவுள் எதிர்ப்பு, மூட நம்பிக்கைகளைச் சாடல்,பகுத்தறிவு வளர்த்தல்,சமதர்மச் சமுதாயம் வளர வழிகாட்டல்  போன்ற தன்மான இயக்கத்தின் கருத்துகளைக் குவித்து வைத்துள்ளன.கவிவசனம் என்ற வடிவத்தை அறிமுகப்படுத்தியவர்..
4.                    பெயர்;  கருணானாந்தம்   15.10.1925
              புனைபெயர்;  ஆனந்தம்,வெங்காயம்
                           ஊர் ;  தஞ்சை
படைத்துள்ள கவிதை நூல்கள்;
                         பூக்காடு, கலையமுது, சுமைதாங்கி,அண்ணா காவியம்,தந்தைபெரியாருடன் நெங்ருகிப் பழகியவர்களில் இவரும் ஒருவர். திராவிட கழகத்தில்இருந்த பொழுது “குடியரசு”இதழில்ஆசிரியராகப்பணிபுரிந்தார்.இவரது “அண்ணாகாவியம்” என்னும் நூல்புலவர் குழந்தையின் இராவண
காவியத்திற்குப் பிறகு வெளிவந்துள்ள சிறந்த பகுத்தறிவுக் காப்பிய நூலாகும்..
 5.                    பெயர்;   இராசேந்திரன் 1938
              புனைபெயர்;  மீரா
                           ஊர் ;  சிவகங்கை
படைத்துள்ள கவிதை நூல்கள்;
                                      கனவுகள்+கற்பனைகள் = காகிதங்கள்,ஊசிகள்,அங்கதம்,நகைச்சுவை,மென்மையான காதல் என இவருடைய களம் தனித்தன்மை கொண்டது.சமூக அவலங்களை கவிதை நூலின் மூலம் எடுத்துகாட்டியவர்..
 6.                        பெயர்;  கஜேந்திரன்  21.03.1940

                        புனைபெயர்;  வேழவேந்தன்
                                    ஊர் ; கும்மிப்பூண்டி
படைத்துள்ள கவிதை நூல்கள்;
                                    தமிழா ! அமுதமா ?., நெஞ்சிலே பூத்த நிலா, வேழவேந்தன்  கவிதைகள்,வண்ணத்தோகை, பாண்டித்தியம்,கவித்துவம், தனித்துவம், என்ற மூன்று தகுதிகளையும் தன்னகத்தே கொண்டவர்.தமது  படைப்புக்களில் மொழியின் மேன்மையை பகுத்தறிவின் தேவையை, சீர்திருத்தத்தின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார். இவரது நூல்கள் முழுவதும் பகுத்தறிவுச்  சிந்தனைகள் பரவிக் கிடக்கின்றன..
        7.                     பெயர்;  புலவர்  குழந்தை   01.07.1906
                                  ஊர் ; ஓலவலசு, ஈரோடு
படைத்துள்ள கவிதை நூல்கள்;
                         கன்னியம்மன் சிந்து, இராவண காவியம் அரசியலரங்கம்,காமஞ்சரி,புலவர்  குழந்தை பாடல்கள், நெருஞ்சிப்பழம்,திருநணாச் சிலேடை வெண்பா, “கருப்புச் சட்டைக்காரர்” என அழைக்கபடுபவர். இராமனை ஆரியன் என்றும் இராவணனைத்  திராவிடன் என்றும் கருதிய திராவிட இயக்கக்  கருத்துக்கேற்ப உருவான காவியம் இராவணகாவியமாகும்..
        8.                            பெயர்;  சுப்புரத்தினம்   29.04.1891
                             புனைபெயர்; தண்டல்காரன்,கிறுக்கன்,புரட்சிக்கவிஞர்,பாவேந்தர்
                                          ஊர் ; புதுவை
படைத்துள்ள நூல்கள்;
                          அழகின் சிரிப்பு,இசையமுது 1,2, இருண்ட வீடு,குடும்பவிளக்கு, இளைஞர் இலக்கியம்,எதிர்பாராத முத்தம்,குறிஞ்சித்திட்டு,தமிழியக்கம், தமிழச்சியின் கத்தி,தேனருவி,பாரதிதாசன் கவிதைகள்1,2,3,4,பாண்டியன் பரிசு,பன்மணித்திரள்,காதல் நினைவுகள்,காதல் பாடல்கள், வேங்கையே எழுக, தமிழுக்கு அமுதென்று பேர்,நான் மலர்கள்,புகழ் மலர்கள், ஒரு தாயின் உள்ளம் மகிழ்கிறது.1928 ஆம் ஆண்டு முதல் தன்மான இயக்கத்தில் சேர்ந்து பணியாற்றினார். பாவேந்தர்  பாரதிதாசன் அவர்கள் தான் திராவிட இயக்ககத்தின் முன்னோடிக் கவிஞராவார்..
       9.                           பெயர்;  புலவர் கோவிந்தன்   15.04.1915
                                        ஊர் ; கும்மிப்பூண்டி
படைத்துள்ள கவிதை நூல்கள்;
                               1951 ஆம் ஆண்டு முதல் 1990 வரை அய்ம்பது நூல்கள் எழுதினார்.நக்கீரர்,பரணர்,கபிலர்,அவ்வையார்,பாவைச்செல்வி,திரையன், நெய்தற்கன்னி,புண் உமிழ் குருதி,காவிரி முதலியன.1.7.1991 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.ஆரிய மாயை போன்ற தடை செய்யப்பட்ட நூல்களை மக்கள்  முன்னே படித்து புதிய எழுச்சியை ஏற்படுத்தியவர்..
     10.                       பெயர்;  துரைராசு.கா.சு.  07.10.1920
                        புனைபெயர்;  முடியரசன்
                                    ஊர் ; பெரியகுளம்
படைத்துள்ள கவிதை நூல்கள்;
                                         முடியரசன் கவிதைகள் தொகுதி 1,2,3,4,பூங்கொடி,காவியப் பாவை,கவியரங்கில் முடியரசன்,வீ ரகாவியம்.1949 ஆம் ஆண்டில் கலப்பு மணம் புரிந்தவர். இவர் பாவேந்தர் பரம்பரையைச் சேர்ந்தவர். கவிஞர் முடியரசனை அறிஞர் அண்ணா திராவிட வானம்பாடி என      குறிப்பிட்டுள்ளார். பாரதி வெளிச்சத்தில் பாரதிதாசன் வழியில் தமிழ் தான் சகலமும் என்னும் தாரக மந்திரத்தை உச்சரித்து நின்றவர்..
உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்.....