நாள் – ஒன்று – 14.02.2019 நிகழ்வு – இரண்டு

Print Friendly, PDF & Email

நாள் – ஒன்று – 14.02.2019

நிகழ்வு – இரண்டு

ஆய்வு – படைப்பு

சிக்கய்ய நாய்க்கர் கல்லூரி வரலாற்றில் தமிழ்த்துறையில் ஒருநாளில் இரண்டு நிகழ்வுகள் நடைபெற்றது. மேலும் ஒரு வரலாற்றுச் சிறப்பு..

ஆய்வையும் படைப்பையும் ஒரு சேர வளர்க்கும் துறை தமிழ்த்துறை என்பது நிரூபணம் ஆனது.

திராவிட இயக்க மறுமலர்ச்சிச் சிந்தனைகள் குறித்த முனைவர் பட்ட வாய்மொழித் தேர்வின் புறநிலைத் தேர்வாளர் முனைவர் கோ.கிருஷ்ணன், மாநிலக் கல்லூரி, சென்னை ஆய்வுரை நிகழ்த்தியது பங்கேற்ற அனைவருக்கும் வரலாற்று பொழிவாக அமைந்தது.

@ திராவிடம்
@ பெண்ணியம்
@ தன்மானம்
@ சாதி இழிவு
@ மத வேறுபாடு
@ சமத்துவம்
@ சகோதரத்துவம்

போன்ற மனிதநேய நெறிகள் குறித்து ஆய்வுரை நிகழ்த்தினார்..

தொடக்கவுரை நிகழ்த்திய பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் பொறுப்புக் குழு உறுப்பினர் முனைவர் பெ.திருநாவுக்கரசு அவர்களுக்கு நன்றி.

வாய்மொழித் தேர்விற்குத் தலைமை வகித்த கல்லூரி முதல்வர், தொழில் மேலாண்மைத்துறை தலைவர் பேரா.எஸ்.சுப்பிரமணியம், நெறியாளர் முனைவர் சி.அங்கயற்கண்ணி, தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ப.கமலக்கண்ணன், துறைப் பேராசிரியர்கள் முனைவர் சா.சிவமணி, முனைவர் அரசு.ஜோதிமணி, பேரா.க.இராக்கு, முனைவர் ந.மணிகண்டன், முனைவர் இரா.விஸ்வநாதன், நூலகர் முனைவர் தி.மகுடீஸ்வரன் மற்றும் அனைத்துத் துறை ஆசிரியர்கள், ஆசிரியரல்லாப் பணியாளர்கள் அனைவருக்கும் நன்றிகள்! பல!

மேலும் விழா சிறக்க ஏற்பாடுகள் செய்த ஆய்வு மாணவர்கள், இளங்கலை மாணவ, மாணவிகளுக்கும் பாராட்டுகள்! நன்றிகள்

உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்.....

Leave a Reply

Your email address will not be published.