
முனைவா ம.பிரகாஷ்

காவ்யா
16, இரண்டாவது குறுக்கு வீதி
கோடம்பாக்கம் சென்னை – 600024.
திராவிட இயக்கத்தின் வயது 100 ஆண்டுகளைத் தொட்டாலும் யாரைத் தீண்டக்கூடாது என்று சொன்னார்களோ அவர்களுக்கான இந்த இயக்கம் என்றும் நமக்குத் தேவையான ஒன்றாகவே உள்ளது.
சாதித் சனியும் தமிழ்ப் பகையும் இல்லாத
ஆதித் தமிழ்நாட்டை அடைவோம் நீ கண்ணுறங்கே
என்று தாலாட்டுப் பாடலைப் பாடிய வாணிதாசனின் பாடலைத் தொடர்ந்து பாட வேண்டும்.

மக்களுடைய கடவுள் நம்பிக்கை, சமயப்பற்று, மூடப்பழக்க வழக்கங்கள் ஆகியவைகளுக்குப் பகுத்தறிவின்மையே காரணம் என்று பெரியார் கருதினார்.

பெரியார் தனக்கு முன்மாதிரி என்று யாரும் இல்லாத சுயசிந்தனையாளராக விளங்கியுள்ளார். அவர் மேற்கொண்ட பகுத்தறிவுப் பணி எப்படிப்பட்ட கருத்துக்களாலும் ஏன்? எதற்கு? எப்படி? என்று கேள்வி கேட்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

பெரியாரைப் பேணிக் கொளல் என்ற இந்த நூல் பெரியார் குறித்து பல்வேறு அறிஞர்கள், ஆர்வலர்கள் பன்நோக்கில் கருத்துக்களை 25 கட்டுரைகளில் வழங்கியுள்ளனர்..! வாழ்த்துக்கள்…
உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்.....