நூல் அறிமுகம் – 7

Print Friendly, PDF & Email
திராவிட இயக்கக் கவிஞர்களும் கவிதைகளும்
✒️ முனைவர் ப.கமலக்கண்ணன்
தொகுப்பாசிரியர்
📚 காவ்யா
16, இரண்டாவது குறுக்கு வீதி
கோடம்பாக்கம்
சென்னை – 600024.
🙏📖🙏📖🙏📖🙏
🌳 இன்றையக் காலக்கட்டச் சூழலில் திராவிட இயக்கத்தின் தேவை நமக்கு இன்றியமையாதது. இந்துத்துவ மதவெறி தமிழகத்தில் மேலோங்கி வளர்ந்து வரும் இந்நாளில் திராவிட இயக்கத்தின் கருதாடல்களையும், செயல்பாடுகளையும் வேகப்படுத்துவது அவசியமாகும். இந்நிலையில் சாதிய உணர்வுகள் நாளுக்குநாள் தொடர்ந்து வளர்ச்சிப் பெற்று வருகின்றன. மூடநம்பிக்கையோடு கூடிய கடவுள் வழிபாட்டு முறைகளும் புற்றீசல்கள் போல் தோன்றிய வண்ணம் உள்ளன.
🌳 இத்தகைய சூழலில் இந்த இயக்கத்தின் தேவையும், பெரியார் கட்டமைத்த கொள்கைகளும் கோட்பாடுகளும் காலத்தின் கட்டாயமாகிறது.
🌳 அந்த வகையில் இந்த நூல் திராவிட இயக்கக் கவிஞர்கள் பெரியாரியக் கருத்துக்களையும், பெரியாரின் சமூகநீதிக் கோட்பாடுகளையும், புரட்சிகரமான சிந்தனைகளையும் தமது படைப்புக்களின் வாயிலாக மக்களிடையே கொண்டு சென்ற தன்மைகளும் விழிப்புணர்வை ஏற்படுத்திய முறைகளும் 25 கவிஞர்களின் படைப்புக்களில் விரிவாக ஆராயப்பட்டுள்ளன.
🌳 20 ஆம் நூற்றாண்டில் தமிழ்ச் சமுதாயத்தில் தம் பேச்சாலும் எழுத்தாலும் தமிழகத்தில் விழிப்புறச் செய்த பேரறிஞர் அண்ணாவின் பகுத்தறிவுச் சிந்தனைகள், வெகுஜனப் பண்பாட்டில் கலைஞரின் கவிதைகள் ஏற்படுத்திய தாக்கம். பெரியாரின் கருத்துக்களையும் சிந்தனைகளையும் கொண்டு சமுதாய நோக்கோடு பாடல்களைப் புனைந்த பாவேந்தர்.
🌳 பகுத்தறிவுக் கருத்துக்களைத் துணிந்துப் பேசியும் பகுத்தறிவாதிகளை வாழ்த்திப் போற்றியும் வளர்ந்த சமூகநீதிப் பாவலர் புலவர் குழந்தை.
🌳 எத்துணைப் பெரிய கருத்தையும், உணர்வையும் தனது கவிதை வரிகளில் மெருகேற்றும் கண்ணதாசன். தமிழுணர்வை அறிவுணர்வாய், இலக்கிய உணர்வாய் தாங்கியிருந்த ஈரோடு தமிழன்பன்.
திராவிட இயக்க உணர்வு, பகுத்தறிவுச் சார்ந்த செயல்பாடுகள், மொழிப்பற்று நிறைந்த பொன்னிவளவன். கல்வியறிவு சிறிதும் இல்லாத உழைப்பாளர் குடும்பத்தில் பிறந்தாலும் கவிபுனையும் ஆற்றல்பெற்ற புலமைப்பித்தன் நவீனத் தமிழ்க் கவிதைகளில் திராவிட இயக்கக் கருத்தாடல்கள் போன்ற திராவிட அறிவு சார்ந்தக் கட்டுரைகள் இடம்பெற்றுத் திகழ்கிறது.
வாழ்த்துக்கள்!
உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்.....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *