நூல் வெளியீட்டு விழா – 05.08.2019

Print Friendly, PDF & Email

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

சிக்கய்ய நாயக்கர் கல்லூரித் தமிழ்த்துறையும் காவ்யா பதிப்பகமும் இணைந்து நிகழ்த்திய புத்தக வெளியீட்டு விழா .கொங்குப் படைப்பாளிகளின் 11 நூல்களை வெளியிட்டு சிறப்புரை வழங்கினார் கவிஞர் சென்னிமலை தண்டபாணி அவர்கள். தனி மனிதனைச் சமூக அக்கறைப்படுத்தும் ரஸ்கினின் கடையனுக்கும் கடைத்தேற்றம், பொதுவுடைமைவாதிகள் வேதாந்தமான மூலதனம் உள்ளிட்ட படைப்புகள் படைக்கப்பட்டதன் பின்னணி, படைக்கப்பட்ட பின்னர் அதன் தாக்கம், நூல்கள் மனித சமூகத்தின் படிநிலை வளர்ச்சியை நிர்ணயிக்கும் என்றதோடு, 11 நூல்களும் பகுத்தறிவுச் சோலையாய்த் திகழும் என்றார் கவிஞர் சென்னிமலை தண்டபாணி. முன்னதாகத் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ப.கமலக்கண்ணன் அவர்கள் வரவேற்புரையாற்றினார். ஈரோடு கலை அறிவியல் கல்லூரியின் மேனாள் தமிழ்த்துறைத் தலைவர் பாலமுருகன் அவர்கள் நூல்களைப் பெற்றுக் கருத்துரை வழங்கினார். படைப்பாளர் முனைவர் அ.குருமூர்த்தி, பேரா.நாகராஜ் , அறிவுகன்பன் உள்ளிட்ட கொங்குப் படைப்பாளிகள் ஏற்புரை வழங்கினர். நூல்களை அழகாக அச்சிட்டு வெளியிட்ட காவ்யா பதிப்பகத்தின் நிறுவனர் பேராசிரியர் சண்முக சுந்தரம் அவர்கள் நூலாக்கத்தின் பின்னணி குறித்து விளக்கினார். பேராசிரியர் ரேவதி அவர்கள் நன்றி உரையாற்ற நூல் வெளியீட்டு விழா இனிதே நிறைவுற்றது.

 

உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்.....

Leave a Reply

Your email address will not be published.