பன்னாட்டுக் கருத்தரங்கம் – 20.09.2019

Print Friendly, PDF & Email

பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரி மற்றும் ஈரோடு சிக்கய்ய நாய்க்கர் கல்லூரித் தமிழ்த்துறைத் திராவிடஇயக்க ஆய்வு மய்யம் இணைந்து 20.09.2019 வெள்ளிக்கிழமை அன்று நடத்திய இலக்கியங்களில் அறம்# என்னும் பொருண்மையில் ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் சங்க இலக்கியம் சார்ந்த 27 கட்டுரைகளும் நீதி இலக்கியம் சார்ந்து 38 கட்டுரைகளும், பக்தி இலக்கியம் சார்ந்து 15 கட்டுரைகளும், காப்பிய இலக்கியம் சார்ந்து 9 கட்டுரைகளும், இடைக்கால இலக்கியம் 16 சார்ந்த கட்டுரைகளும், மறுமலர்ச்சி கால இலக்கியம் சார்ந்த 22 கட்டுரைகளும், நவீன இலக்கியம் சார்ந்து 18 கட்டுரைகளும், நாட்டுப்புற இலக்கியம் சார்ந்து ஆறு கட்டுரைகளும், பொதுவான கட்டுரைகளாக 14ம், ஆங்கில கட்டுரைகள் 15, மொத்தம் 182 கட்டுரைகள் தொகுக்கப்பட்டு இரண்டு தொகுதிகளாக வெளியிடப்பட்டன. இந்நிகழ்வின் வரவேற்புரையை கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் செ. சதீஷ்குமார் அவர்கள் ஆற்றினார் பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் ஆர். சண்முகன் அவர்கள் தொடக்க உரையாற்றினார். தலைமை உரையை பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரியின் பொருளாளர் வி ஆர் முருகன் அவர்கள் ஆற்றினார். முதல் ஆய்வுக்கோவையை வெளியீட்டு கருத்தரங்க நோக்க உரையை சிக்கய்ய நாயக்கர் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் மற்றும் திராவிட இயக்க ஆய்வு மையத்தின் நிறுவனர் முனைவர் ப. கமலக்கண்ணன் அவர்கள் ஆற்றினார். மேலும் இரண்டாவது ஆய்வுக்கோவையை வெளியீட்டு கருத்தரங்க சிறப்புரையை வட-அமெரிக்க வாசிங்டன் வட்டார தமிழ்ச்சங்கம் மேனாள் தலைவர் வலைத்தமிழ் ஆசிரியர் திரு பார்த்தசாரதி அவர்கள் ஆற்றினார். இந்நிகழ்வின் முதல் அமர்வாக சங்க இலக்கியம், நீதி இலக்கியம் எனும் அமர்விற்கு தலைவராக சிக்கய்ய நாயக்கர் கல்லூரி தமிழ்த்துறை இணைப்பேராசிரியர் முனைவர் சி. அங்கயற்கண்ணி அவர்கள் அங்கம் வகித்தார். இரண்டாவது அமர்வாக பக்தி இலக்கியம், காப்பியம் என்று அமர்விற்கு சிக்கய்ய நாய்க்கர் கல்லூரி தமிழ்த்துறை மேனாள் பேராசிரியர் முனைவர் கி. நாகராஜன் அவர்கள் அங்கம் வகித்தார். மூன்றாம் அமர்வாக இடைக்கால இலக்கியம், மறுமலர்ச்சியில் இலக்கியம் என்ற அமர்விற்கு கோவை நிர்மலா மகளிர் கல்லூரி தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் ப. மகேஸ்வரி அவர்கள் அங்கம் வகித்தார். அமர்வு 4 நவீன இலக்கியம், பொதுமை, ஆங்கில கட்டுரைகளின் அமர்வு தலைவராக ஈரோடு நந்தா கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ப. கோமதி சுப்பிரமணியம் அவர்கள் அங்கம் வகித்தார். நிகழ்வின் இறுதியாக பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நன்றியுரையை பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரி கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் உதவி பேராசிரியர் முனைவர் க. செல்லதுரை அவர்கள் ஆற்றினார். இந் நிகழ்வுக்கான ஏற்பாடுகளை பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரியின் தமிழ் துறைப் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

 

 

 

உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்.....

Leave a Reply

Your email address will not be published.