பன்னாட்டுக் கருத்தரங்கம் – 14.12.2019 – மூன்றாம் பகுதி

Print Friendly, PDF & Email

திராவிடம் வளர்த்த தமிழ்’ பன்னாட்டுக் கருத்தரங்கம் – 14.12.2019.
மலேசியா உலகத் தமிழ்க் காப்பிய நிறுவனம், சென்னை காவ்யா பதிப்பகம், ஈரோடு சிக்கய்ய நாய்க்கர் கல்லூரித் தமிழ்த்துறை இணைந்து நிகழ்த்திய பன்னாட்டுக் கருத்தரங்கில் மலேசியாவின் மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறைப் பேராசிரியர் சு.குமரன் அவர்கள் ஆய்வுக் கோவையை வெளியிட்டுச் சிறப்புரை வழங்கினார். “250 ஆண்டுகளுக்கு முன்பு நாகப்பட்டினத்தின் தென்பகுதியிலிருந்து மலேசியாவிற்குப் புலம் பெயர்ந்த தமிழ்ச் சந்ததியின் அடையாளம் நாங்கள். இங்கிருந்து பிழைப்புக்காகச் சென்ற நாங்கள் மொழியையும், மொழிவழி இலக்கியத்தையும் நம்பிக்கையையும் பேராற்றலையும் எடுத்துச் சென்றோம். இங்கு திராவிடச் சூழலில் தைரியத்துடன் தமிழ் வளர்க்கும் நிலை அங்கில்லை. எதிர்கால நம்பிக்கையான இளந்தலைமுறையினராகிய நீங்கள் இந்தியத் தமிழகத்தில் தமிழை வளர்த்தால் தான் நாங்கள் மலேசியாவில் நிம்மதியான வாழ்வியல் சூழலை மேற்கொள்ள இயலும். அதற்கான முன்னெடுப்பை இக்கருத்தரங்கம் தொடங்கியுள்ளது” என்றார். காவ்யா பதிப்பக நிறுவனத் தலைவர் பேரா.சண்முகசுந்தரம் புழங்குபொருள் கண்காட்சியைத் திறந்து வைத்தார். மைசூரு இந்திய மொழிகளின் நடுவண் நிறுவன மேனாள் பேராசிரியர்கள் முனைவர் ந.நடராசப்பிள்ளை மற்றும் முனைவர் சாம் மோகன் லால் ஆகியோர் புத்தகக் கண்காட்சியைத் தொடங்கி வைத்தனர். இக்கருத்தரங்கில் மதுரை மொழியியல் ஆய்வாளர் வி.ரேணுகாதேவி, உலகத் தமிழ்ச் சங்க மேனாள் பொறுப்பாளர் முனைவர் பசும்பொன், வேளாளர் மகளிர் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ஆர்.நிர்மலாதேவி, ஆ.சுகன்யாதேவி, நவரசம் கலை அறிவியல் கல்லூரி தமிழ்த்தலைவர் ஐ.செல்வம், ந.சரஸ்வதி பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் செ.சதீஸ்குமார், தமிழ் ஆர்வலர் கடவூர் மணிமாறன், வேல்ஸ் பல்கலைக்கழக தமிழ்த்துறைப் பேராசிரியர் ம.பிரகாஷ், சு.சுரேந்திரன், த.கண்ணன், ஆ.அழகேசன், தேசியக் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் ச.ஈஸ்வரன், இரா.இரவிச்சந்திரன், ஈரோடு கலை அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ஆ.செந்தாமரை, முனைவர் நாகராஜன் ஆகியோர் பங்கேற்றுச் சிறப்பித்தனர். மேலும் கருத்தரங்கம் 5 அமர்வுகளாக நிகழ்ந்தேறியது. அமர்வுத் தலைவர்களாக முனைவர் ச.ஈஸ்வரன், பேரா.க.இராக்கு, முனைவர் ம.பிரகாஷ், முனைவர் ஆ.குருமூர்த்தி, முனைவர் ஆ.ரேவதி ஆகியோர் 40 ஆய்வாளர்களை நெறிப்படுத்தினர். முன்னதாகக் கருத்தரங்கில் பங்கேற்று ஆய்வுக்கட்டுரை வழங்கிய ஆய்வாளர்களுக்குக் கருப்பண்ணன் மாரியப்பன் கல்லூரியின் முதல்வர் முனைவர் சி.ரீ.கிளாடிஸ் லீமா ரோஸ் அவர்கள் சான்றிதழ்களை வழங்கினார். முன்னதாக நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களைக் கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் ப.கமலக்கண்ணன் வரவேற்றார். முடிவில் உதவிப் பேராசிரியர் மு.சதீஸ்குமார் நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் முனைவர் சி.அங்கயற்கண்ணி, பேரா.க.இராக்கு, முனைவர் இரா.விஸ்வநாதன் மற்றும் ஆய்வு மாணவர்கள் செய்திருந்தனர். நிகழ்ச்சியின்போது மரக்கன்றுகள், விதைப்பந்துகள் கருத்தரங்கப் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.

 


 

 

 

உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்.....

Leave a Reply

Your email address will not be published.