புதுமை வாழ்த்து

Print Friendly, PDF & Email

                                                            புதுமை வாழ்த்து

பெண்ணே !
உதடுகளில் வண்ணம்
தீட்டுவதை விடுத்து
உலக அசைவுகளை
உற்று நோக்கு !

உனது விழிகளுக்குக்
கறுப்பு மை வேண்டாம்
கன்னித் தமிழின்
வீரம் வேண்டும் !

உனது கூந்தலில்
பூக்களைச் சூடுவதை விட
மூளைக்குள்
புறநானூற்று வரிகளைப் புகட்டு !

முறமெடுத்து புலி விரட்டிய
புறப்பாட்டின் வடிவமே !

நெஞ்சை அள்ளும்
புதுக்கவிதைப் புத்தகமே !

இதுவரையில் – நீ
வரவேற்பு அறையில்
பொம்மையாகி உருகியது போதும்
வன்முறையின் இடுப்பொடித்து
வல்லூறுகளை அடுப்பெரித்து
உன்னை – இனியாவது
வரலாற்று வரிகளுக்குச் சொந்தமாக்கு !

                        – முனைவர் ப.கமலக்கண்ணன்

உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்.....

Leave a Reply

Your email address will not be published.