பெரியார் – அண்ணா நினைவகம் – 03.03.2020

Print Friendly, PDF & Email

03.03.2020 அன்று சிக்கய்ய நாய்க்கர் கல்லூரித் தமிழ்த்துறை சார்பாக முதலாமாண்டு, இரண்டாமாண்டு மாணவ மாணவிகள் கல்வி சுற்றுலாவிற்காக ஈரோடு பெரியார் – அண்ணா நினைவகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு பெரியாரின் உருவச்சிலை, அவர் குறித்த ஆவணங்கள், புத்தகங்கள், நிழற்படங்கள், செய்தித்தாள்கள், பெரியார் பிறந்தபோது பயன்படுத்திய கட்டில், அண்ணாப் பயன்படுத்திய அலுவலக அறை, அண்ணாவின் உருவச்சிலை, பெரியார் உருவ அஞ்சல் தலைகள், அவர் பயன்படுத்திய எழுதுகோல், படுக்கை அறை, சுழற்நாற்காலி, சக்கர நாற்காலி ஆகியவற்றை பார்த்தனர். மாணவ மாணவிகளை முனைவர் பட்ட ஆய்வாளர் செ.மா.சிவக்குமார், கா.கிருத்திகா, ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வாளர் மா.சாந்தாமணி ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்.....

Leave a Reply

Your email address will not be published.