போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி முகாம் -29.03.2019

Print Friendly, PDF & Email

ஈரோடு சிக்கய்ய நாய்க்கர் கல்லூரித் தமிழ்த்துறையும் தாவரவியல் துறையும் இணைந்து நிகழ்த்திய போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி முகாம் 29.03.2019 அன்று கல்லூரி் கலையரங்கில் நிகழ்ந்தேறியது…

இப்பயிற்சி முகாமைத் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ப.கமலக்கண்ணன் அவர்கள் தொடக்கி வைத்து வரவேற்புரையாற்றினார்.

கோபி பி.கே.ஆர்.மகளிர் கல்லூரியைச் சார்ந்த போட்டித் தேர்வுப் பயிற்றுநர் செல்வி.வி.புவனேசுவரி அவர்கள் சிறப்பு 
விருந்தினராகக் கலந்து கொண்டு போட்டித் தேர்விற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தினார்..

போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பி்க்கும் முறை, போட்டித் தேர்வுகளை எதிர்க்கொள்ளும் முறை, பயிற்சிக் கையேடுகளை உருவாக்குதல், முதல் நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வுகளை எதி்ர்கொண்டு வெற்றி பெறுதல் போன்றவற்றை, மாணவகள் பயனுறப் பயிற்சியாக வழங்கினார்.

இந்நிகழ்வில் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் முனைவர் சி.அங்கயற்கண்ணி, முனைவர் சா.சிவமணி, முனைவர் ந.மணிகண்டன், முனைவர் இரா.விஸ்வநாதன், அழைப்புப் பேராசிரியர் திருமதி.கா.கிருத்திகா, நூலகர் முனைவர் தி.மகுடீஸ்வரன், தாவரவியல் துறைத் தலைவர் பேரா.இரா.மோகன்ராஜ், பேராசிரியர் முனைவர் இரா.கண்ணன், அழைப்புப் பேராசிரியர் திரு.ராஜேஷ் மற்றும் கணிதத்துறைப் பேராசிரியர்
பேரா.ந.மோகனசொரூபசுந்தரி ஆகியோர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

மேலும் நிகழ்வு சிறக்க ஏற்பாடுகள் செய்த ஆய்வு மாணவர்கள், இளங்கலை மாணவ, மாணவிகளுக்கும் பாராட்டுகள்! நன்றிகள்!

உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்.....

Leave a Reply

Your email address will not be published.