குழந்தை இலக்கியத்தில் வாழ்வியல் விழுமியங்கள் -முனைவர் சி.அங்கயற்கண்ணி

Print Friendly, PDF & Email

 குழந்தை இலக்கியத்தில் வாழ்வியல் விழுமியங்கள்

முனைவர் சி.அங்கயற்கண்ணி

இணைப் பேராசிரியர் மற்றும் தமிழ்த்துறை

சிக்கய்ய நாய்க்கர் கல்லூரி

ஈரோடு.

              சமுதாயத்தில் காலச்சூழலுக்கேற்ப இலக்கிய வகைகள் உருவாகின்றன. மக்களின் விருப்பு, வெறுப்பு, சுற்றுச்சு}ழல், பிறமொழித்தாக்கம், சமுதாயமாற்றம் போன்றவை புதுப்புது இலக்கிய வகைகள் உருவாவதற்குப் பெரிதும் துணை புரிகின்றன.
குழந்தைகளுக்கான பாடல்கள் உலகம் எங்கும் இருக்கின்றன. உயர்ந்த இலக்கியச் செழுமைகள் இல்லாத மொழிகளிலும் குழந்தைப் பாடல்கள் உண்டு என கலை களஞ்சியம் கூறுகிறது. ஆனால் இலக்கண இலக்கியங்கள் குவிந்து கிடக்கும் நம் மொழியில் தொன்றுதொட்டு வளர்ந்து வந்துள்ளன என்றே கூறலாம்.
இத்தகைய பாடல்களின் உருவாக்கமாக இருதாம் நூற்றாண்டினைக் கூறுவதோடு நின்றுவிடாமல் தொடர்ந்த இன்றுவரை பல்துறையாகச் செழித்தும் வருகிறது.
குழந்தை இலக்கிய மறுமலர்ச்சி

“உள்ளத்துள்ளது கவிதை – இன்பம்
  உருவெடுப்பது கவிதை
  தெள்ளத் தெளிந்த தமிழில் உண்மை
   தெளிந்துரைப்பது கவிதை”

என்பார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை.

              20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் ஆர்வத்தோடு ஆடியும், பாடியும் மகிழும் குழந்தைகளுக்கே உரிய கவிதைகள் தோன்றின. குழந்தைகளிடம் நல்ல பழக்க வழக்கங்களைக் கற்றுத் தரவேண்டுமென்றும் அவர்களுக்கு இளமையிலேயே நல்ல அறிவுரைகளைக் கூற ஆற்றுப்படுத்தி வளர்க்க வேண்டியது இன்றியமையாததாகக் கருதப்பட்டது. மேலும் உள்ளத்தைச் செம்மைப்படுத்தும் முறைகளைக் கவிஞர்கள் தம் கவிதையில் சிறப்பாகவும், எளிதாகவும் எடுத்துக் காட்டியும் வந்துள்ளனர்.

“ஒழுக்க வாழ்விற்கான அடிப்படை போதகரால் இடப்படுவதில்லை
  கவிஞர்களாலேயே இடப்பெறுகின்றது”

              என்ற சொல்லின் கருத்து நினைவிற் கொள்ளத்தக்கது. காலமமறிந்து விதைக்கப்படும் விதைகள்தான் சிறப்பான பயனை நல்கும். எனவே நல்வாழ்விற்கான ஒழுக்க நெறிகளை குழந்தைப் பருவத்திலேயே உள்ளத்தில் ஊன்ற வேண்டுவது அவசியம்.
ஒழுக்க நெறி என்பது குழந்தைப் பாடல்களின் கொள்கைகளில் ஒன்று. பாடுபொருள் அடிப்படையில் அகநிலை ஒழுக்கம் என்பது உண்மை தொடர்பானது. புறநிலை ஒழுக்கம் சமுதாயச் சார்புடையது. மேலும் இவ்வொழுக்கம் பற்றிய நெறிகளை,

                                   1.மனம் பற்றியன
                                 2.சொல் பற்றியன
                                 3.செயல் பற்றியன

             என்று முப்பிரிவாக்கி பல்வேறு தளங்களில் ஆராயப்பட்டு வருகின்றன். மனம் நன்னெறிகளைக் கேட்டுத்தான் பக்குவம் பெறமுடியும். மனமே அனைத்து விளைவுகளுக்கும் அடிப்படையாக அமைகிறது. ஆதலின் கவிஞர்கள் குழந்தைகளின் மனதை செம்மைப்படுத்த பல நற்கருத்துக்களைத் தம் பாடல்களில் அவசியம் கருதி மறைபொருளாக வலியுறுத்தி வருகின்றனர்.

             நாட்டுப்பற்று, மொழியுணர்வு, இரக்கம், அன்பு போன்ற மனம் பற்றிய ஒழுக்க நெறிகளை கவிஞர்கள் ஒரு பகுதியாகவும் எடுத்துரைத்து உள்ளனர்.

“காக்கை இடத்து ஒற்றுமையைக்
கற்றே உயர வேண்டும் நாம்”
“உண்ட சோற்றை எண்ணி
உயிரும் விடத் துணிபவன்”

என நன்றியுணர்வு வலியுறுத்தப்படுகிறது.

                  பேசும் சொற்கள் தூய்மையானதாக இருக்க வேண்டும். நாம் பேசும் சொற்கள் நம்மை இனங்காட்டும் ஆற்றல் படைத்தவை.

“பொய் சொல்ல மாட்டோம்
   பொய் சொல்ல மாட்டோம்
  தப்பதம் செய்தாலும்
  தண்டிக்க வந்தாலும்
  பொய் சொல்ல மாட்டோம்
   பொய் சொல்ல மாட்டோம்”

                என்னும் பாடல் குழந்தைகள் உண்மை பேச வேண்டும். நல்ல சொற்கள், இன்மையாகப் பேச வேண்டும். பயன் இல்லாச் சொற்களைப் பேசக்கூடாது என்பது சொல் பற்றிய ஒழுக்க நெறிகளாகும்.
மனிதனின் ஆளுமையை விட அவன் செயல்முறைகளே கருவியாகப் பயன்படுகிறது. நாகரிகமும், நாகரிகமின்மையும், மனிதனின் செயல்களினாலேயே வெளிப்படுகின்றன. எனவே செயல்களில் ஒழுங்கு வேண்டும். ஒழுங்கினின்றும் வழுவி அமையும் செயல்களை மனிதன் செய்ய முற்படும் போது விலங்கினும் கீழாக மாறிவிடுகிறான். எனவே கவிஞர்கள் குழந்தைகளுக்க பல ஒழுக்க நெறிகளை பாடல்களின் மூலமாக வழங்கியிருக்கிறார்கள்.

“நற்பழக்கம் குழந்தைப் பருவத்தில் உருவாக்கப்படுகின்றது”

என்பது உளவியல் கூற்றாகும்.

“எப்பொழுதும் பாதையில்
இடது பக்கம் நடந்துபோ
தப்பில்லாமல் நடப்பதால்
தடைகள் வாய்ப்பதில்லையே”

           என்னும் பாடலில் குழந்தைகள் பொது இடங்களில் பின்பற்ற வேண்டிய ஒழுக்க விதிகளை எப்படியெல்லாம் கடைப்பிடிக்க வேண்டும் என்று கவிஞர் பெருஞ்சித்திரனார் அறிவுரையாகக் கூறுவது தனிச்சிறப்பாள் அமைந்துள்ளது.

வாழ்வியல் நெறிகள்

              தற்கால குழந்தை இலக்கியத்தில் காணப்படும் பாடுபொருள்கள் அனைத்தும் குழந்தைகள் விரும்பும், விளையாடும், கண்டு வியக்கும், உன்னதப் பொருளாகவே அமைந்துள்ளன. குழந்தைகளின் வளர்நிலைக்கு ஏற்ப உள்ளத்தின் பக்குவம் உணரவும், பயன்படுத்தவும், ஒழுக்கம், அன்பு, வீரம், ஈகை, இரக்கம் போன்றவைகளை உரமாகக் கொண்டு இலக்கியங்கள் உருபெற்று வருகின்றன.

             படிப்பின் அவசியத்தைக் கவிஞர் தமிழ்ஒளி இன்றியமையாமையக் குழந்தைகளுக்கு உணர்த்துவதாக உள்ளது.

“பாடம் மறியா ஒரு பையன்
பள்ளி செல்லா ஒரு பையன்
மூடன் ஆனான் முன்னாலே
மூட்டை சுமந்தான் பின்னாலே’

        உரிய வயதில் கற்க வேண்டிய கல்வியைக் கற்கவில்லையானால் வருங்காலத்தில் எத்தகைய இன்னல்களும், இடர்பாடுகளையும் எதிர் கொள்ள வேண்டிய வரும் என்hதைக் கவிஞர்கள் எடுத்துக் கூறி வந்துள்ளனர்.

“அன்பான நெஞ்சம் அழகிய தோட்டம்
அன்பான எண்ணமே அதில் மரக்கூட்டம்
அன்பான வார்த்தையே அதன் பூவும் காயும்
அன்பான செய்கையே அருங்கனியாகும்”

             அன்பு என்ற பண்பு குழந்தைகளின் உள்ளங்களைப் பண்படுத்தும் அழகிய தோட்டமாகவும், அதில் விளையும் காய்கனிகள் நல்லொழுக்கங்களாகவும் அமைந்து கவிஞரின் கருத்திற்கு வலு சேர்ப்பதாக அமைந்துள்ளன.

             பிறருக்கு உதவுதல், பகிர்ந்துண்ணல், கூடி வாழ்தல், சுறுசுறுப்பாய் இருத்தல், உழைத்தல், சான்றோரைப் போற்றுதல், நல்ல நூல்களைப் படித்தல், பள்ளிக்கு ஒழுங்காகச் செல்லுதல் ஆகியன கவிஞர்கள் வலியுறுத்தும் வருங்கால செல்நெறிகளாகும்.

              வளரும் குழந்தைகளுக்கு மொழி, நாடு, இனம் குறித்த உணர்வு இளமையிலேயே வளர வேண்டும். தமிழ்த் திருநாட்டைப் பெற்ற தாயென்று போற்றி வணங்க வேண்டும் எனும் கருத்தை மிகச்சுருக்கமாக எளிய மொழியில் புரியும் வண்ணம் அமைந்துள்ளது.

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே – அதைத்
தொழுவது படித்திடடி பாப்பா”.

என மொழியின் சிறப்பைக் குழந்தைகளுக்கு பாரதியர் உணர்த்துகிறார்.

             ஒழுக்க நெறிகளைப் புகட்டல் குழந்தைப் பாடல்களின் சீரிய கொள்கையில் ஒன்றாகத் திகழ்கிறத. மனிதனின் மனமே அனைத்து விளைவுகளுக்கும் அடிப்படை மனம் பண்பட்டதாக விளங்கினால் மனிதன் தன் வாழ்க்கையில் மாறாது வாழமுடியும். எனவே குழந்தைகளின் நெஞ்சத்தினைச் செம்மைப்படுத்தும் பல ஒழுக்க நெறிகளை நாம் படைப்புகளில் விதைக்க வேண்டும்.

           குழந்தைகள் வளரும் பருவங்களில் நல்ல சொற்களைப் பேச வேண்டும். உண்மை பேச வேண்டும். இனிமையாகப் பேச வேண்டும். பயனற்ற சொற்களைப் பேசிக் காலத்தை வீணே கழித்தல் சமுதாயத்திற்கு எந்தவிதப் பயனும் தராது என்பதையெல்லாம் நாம் குழந்தைகளுக்கு அறிவுறுத்த வேண்டும்.

           சமுதாயத்தில் வாழும் மக்கள் தங்களுக்குள் ஒற்றுமையை வளர்த்துக் கொள்ளவும். தம்மிடையே மகிழ்லைப் பரிமாறிக் கொள்ளவும் உருவாக்கப்பட்டவைதாம் விழாக்கள். சித்திரை நாள், குடியரசு நாள் போன்றவை இவ்விழாக்களின் முலதான சமுதாயப்; பண்பாட்டு அவினையும் நோக்கங்களையும், பயன்பாடுகளையும் விளக்கி, மரபுவழிப் பழக்க வழக்கங்கள், நம்பிக்கைப் முதலான சமுதாயப் பண்பாடு அறினையும் குழந்தைளுக்கு வழங்க வேண்டும்.

           கதையை பாடுபொருளாகப் கொண்டு பாடப் பெறும் கதைப்பாடல்கள் குழந்தைப் பாடல்களில் சுவையும், விறுவிறுப்பும் கொண்டவை. அத்தகுக் கதைப் பாடல்கள் பல்வேறு போதனைகள் இடம் கொடுத்துக் குழந்தைகளுக்கு வழி காட்டுவனவாக அமைந்துள்ளன.

“பெருமை பேசித் திரிந்திடுவோர்
அது சரியில்லை
பின்னால் சிறுமையடையக் கூடும்
அது பெருந்தொல்லை”

            என்னும் பாடலில் பெருமை பேசித் திரிபவர்கள் பின்னாளில் சிறுமையடையக் கூடும் என்ற நீதியை குழந்தைகளுக்கு அறிவுறுத்துகிறது.

          ஆன்றோர்களும், சான்றோர்களும் வாழ்ந்த இந்த நாடு அமிழ்தினும் இனியதாகும். எதிர்கால சமுதாயத்தை உருவாக்குபவர்கள் குழந்தைகள். நாளைய தலைமுறைகளான இன்றைய குழந்தைகளை நல்லவர்களாகவும், வல்லவர்களாகவும் வளர – வாழ வழிவகுக்கும் வகையில் நாம் பாதையமைக்க வேண்டும்.

“எந்தக் குழந்தையும்
நல்லக் குழந்தைதான்
மண்ணில் பிறக்கையிலே”

என்ற கவிஞரின் கூற்றை எதிர்கால நலன் கருதி தொய்வின்றி மீட்டெடுப்போம்.

——

உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்.....

Leave a Reply

Your email address will not be published.