திராவிடச் சீற்றம்
குனிந்து கிடந்த
தமிழினத்திற்குப்
புத்துயிர் புகட்டிய
முதுகெலும்பு நீயானாய் !
இறுகிப் போன
தமிழனின் உணர்வுக்கு
உருகி ஓடும்
உணர்வின் நாளமானாய் !
சாத்திரம் பேசும்
அய்ந்தாம் படைக்கு
சமத்துவம் புகட்டும்
சண்டமாருதம் ஆனாய் !
பொய்களைப் பேசி
போலிகளாய்த் திரியும்
பரிதாப உயிர்களுக்கு
பண்பைப் புகட்டும்
பகுத்தறிவு விளக்காணாய் !
இன உணர்வின் பிறப்பே
இன்பத் தமிழின் சிறப்பே
வாழிய உனது புகழ் !
– முனைவர் ப.கமலக்கண்ணன்