














இருபதாம் நூற்றாண்டுக் குழந்தைப் பாடல்கள்
நூல் அறிமுகம் – 01
நாம் திராவிடர்
முனைவர் ப.கமலக்கண்ணன்
காவ்யா
16, இரண்டாம் குறுக்குத் தெரு, டிரஸ்ட் புரம், சென்னை – 600024.
மனித மாண்பு, மனிதநேயம், மனித உரிமை ஆகியவற்றைப் பெற்று வாழ்ந்திடவும் சமத்துவம், சமூக பொருளாதாரம், அரசியலில் உரிமை பெற்றிடவும் தமிழகத்தில் சில இயக்கங்கள் எழுச்சி கொண்டன. இவற்றில் புதிய சக்தியாக உருவெடுத்தது திராவிட இயக்கம். மானுடத்தின் கவலையற்ற நல்வாழ்வுக்கும் திராவிடரின் நல்வாழ்விற்கும் தன்மானக் கொள்கை இன்றியமையாதது என்பதை தந்தை பெரியார் நன்கு உணர்ந்திருந்தார். திராவிட இயக்கமானது சமூக நீதி, இட ஒதுக்கீடு, தமிழ் மொழி, இனம், நாடு ஆகியவற்றின் மேம்பாடு போன்ற பல்வேறு கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு கவிதை, நாடகம், கட்டுரை போன்ற படைப்புகள் மூலமும் இதழ்கள், திரைப்படம் போன்ற ஊடகங்களின் மூலமும் தங்களின் இருப்பை தக்க வைத்துக் கொண்டனர். இன்றையத் தமிழகச் சூழலில் திராவிட இயக்கத்தின் செயல்பாடுகள் மீண்டும் எழுச்சி பெற வேண்டும். வெற்று தமிழ் தேசியத்தை உதறி வீர தமிழ் திராவிடத் தத்துவத்தை நிலைநிறுத்த வேண்டும். மேலும் தந்தை பெரியாரின் சிந்தனைகள் குறித்த தேடலுக்கும், தேடியப் பயன்பாடுகளைக் கணிப்பதற்கும் தேவையிருக்கிறது என்பதின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது தான் இந்நூல். தமிழனின் மொழி, இனம், பண்பாடு, சாதி,சமயம், அரசியல் சார்ந்த நடப்புகள் குறித்தும், மொழியின் கூர்மையான ஒரு பகுதியாக விளங்கும் இலக்கிய வளம் குறித்த தந்தை பெரியாரின் பார்வை ஆகியவை குறித்தும் இந்நூலில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.