நூல் அறிமுகம் – 7

திராவிட இயக்கக் கவிஞர்களும் கவிதைகளும்
✒️ முனைவர் ப.கமலக்கண்ணன்
தொகுப்பாசிரியர்
📚 காவ்யா
16, இரண்டாவது குறுக்கு வீதி
கோடம்பாக்கம்
சென்னை – 600024.
🙏📖🙏📖🙏📖🙏
🌳 இன்றையக் காலக்கட்டச் சூழலில் திராவிட இயக்கத்தின் தேவை நமக்கு இன்றியமையாதது. இந்துத்துவ மதவெறி தமிழகத்தில் மேலோங்கி வளர்ந்து வரும் இந்நாளில் திராவிட இயக்கத்தின் கருதாடல்களையும், செயல்பாடுகளையும் வேகப்படுத்துவது அவசியமாகும். இந்நிலையில் சாதிய உணர்வுகள் நாளுக்குநாள் தொடர்ந்து வளர்ச்சிப் பெற்று வருகின்றன. மூடநம்பிக்கையோடு கூடிய கடவுள் வழிபாட்டு முறைகளும் புற்றீசல்கள் போல் தோன்றிய வண்ணம் உள்ளன.
🌳 இத்தகைய சூழலில் இந்த இயக்கத்தின் தேவையும், பெரியார் கட்டமைத்த கொள்கைகளும் கோட்பாடுகளும் காலத்தின் கட்டாயமாகிறது.
🌳 அந்த வகையில் இந்த நூல் திராவிட இயக்கக் கவிஞர்கள் பெரியாரியக் கருத்துக்களையும், பெரியாரின் சமூகநீதிக் கோட்பாடுகளையும், புரட்சிகரமான சிந்தனைகளையும் தமது படைப்புக்களின் வாயிலாக மக்களிடையே கொண்டு சென்ற தன்மைகளும் விழிப்புணர்வை ஏற்படுத்திய முறைகளும் 25 கவிஞர்களின் படைப்புக்களில் விரிவாக ஆராயப்பட்டுள்ளன.
🌳 20 ஆம் நூற்றாண்டில் தமிழ்ச் சமுதாயத்தில் தம் பேச்சாலும் எழுத்தாலும் தமிழகத்தில் விழிப்புறச் செய்த பேரறிஞர் அண்ணாவின் பகுத்தறிவுச் சிந்தனைகள், வெகுஜனப் பண்பாட்டில் கலைஞரின் கவிதைகள் ஏற்படுத்திய தாக்கம். பெரியாரின் கருத்துக்களையும் சிந்தனைகளையும் கொண்டு சமுதாய நோக்கோடு பாடல்களைப் புனைந்த பாவேந்தர்.
🌳 பகுத்தறிவுக் கருத்துக்களைத் துணிந்துப் பேசியும் பகுத்தறிவாதிகளை வாழ்த்திப் போற்றியும் வளர்ந்த சமூகநீதிப் பாவலர் புலவர் குழந்தை.
🌳 எத்துணைப் பெரிய கருத்தையும், உணர்வையும் தனது கவிதை வரிகளில் மெருகேற்றும் கண்ணதாசன். தமிழுணர்வை அறிவுணர்வாய், இலக்கிய உணர்வாய் தாங்கியிருந்த ஈரோடு தமிழன்பன்.
திராவிட இயக்க உணர்வு, பகுத்தறிவுச் சார்ந்த செயல்பாடுகள், மொழிப்பற்று நிறைந்த பொன்னிவளவன். கல்வியறிவு சிறிதும் இல்லாத உழைப்பாளர் குடும்பத்தில் பிறந்தாலும் கவிபுனையும் ஆற்றல்பெற்ற புலமைப்பித்தன் நவீனத் தமிழ்க் கவிதைகளில் திராவிட இயக்கக் கருத்தாடல்கள் போன்ற திராவிட அறிவு சார்ந்தக் கட்டுரைகள் இடம்பெற்றுத் திகழ்கிறது.
வாழ்த்துக்கள்!
உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்.....

நூல் அறிமுகம் – 06

தமிழன் என்று சொல்லடா
தலை குனிந்து செல்லடா
✒️ ஈரோடு அறிவுக்கன்பன்
📚 காவ்யா
16, இரண்டாவது குறுக்கு வீதி
கோடம்பாக்கம்
சென்னை – 600024.
🙏📖🙏📖🙏📖🙏
🌳மனிதனுடைய பகுத்தறிவை அளவுகோலாகக் கொண்டு வாழ்வின் பல்வேறு நிலைகளையும், இயல்புகளையும் கள ஆய்வின் மூலம் கண்டறிந்து தமிழர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் தந்தை பெரியார்.
🌳 தமிழனின் உரிமைகள் எந்த வகையில் பாதித்தாலும் அதனைக் களைய வேண்டும் என்பதில் முனைப்பாக இருந்தவர். தமிழனின் வாழ்வு செழிக்க தமிழகத்தில் தன்னையே அர்ப்ணித்தவர். மனித மாண்மையும், சமத்துவத்தையும் இலக்காகக் கொண்ட உலகுதழுவிய அறிவியல் தன்மதிப்பாளர். அத்தகைய சான்றோரின் கருத்துகளையும், சிந்தனைகளையும் உள்வாங்கி கொண்டு வாழ்ந்து வருபவர் இந்நூலின் ஆசிரியர் ஈரோடு அறிவுக்கன்பன்.
🌳 தந்தை பெரியாரின் சிந்தனைகள் குறித்தும், அவரது தொலை நோக்கு தேடல்கள் குறித்தும் அவற்றின் பயன்பாடுகளைக் கணிப்பதற்கு இன்றைக்கும் தேவை இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் வகையில் இந்த நூலை உருவாக்கியுள்ளார்.
🌳 கடவுள், மதம், சாதி ஒழிப்பு, பெண் உரிமை, மூடநம்பிக்கை ஒழிப்பு, அறிவியலின் முதன்மை போன்ற அய்யாவின் கருத்துகள் கட்சிவேறுபாடின்றி, அனைவரையும் கவர்ந்தது. அதனால் ஈர்க்கப்பட்ட இளைஞர்கள், அறிவுஜீவிகள் அலை அலையாய் திராவிட இயக்கத்திற்கு வருகை தந்தனர்.
🌳ஆனால் இன்று திரைப்பட மோகம், இணையத்தின் ஈர்ப்பு, தன்னல வேட்கைகள் மேலிட உறுதியான முடிவை எட்டமுடியாமல் உருக்குலைந்து தேய்ந்து வருவதை நூல் முழுவதும் உரிய சான்றுகளுடன் விவரிக்கிறார்.
🌳 நமது முன்னோரின் மொழி மற்றும் இன மாண்பிற்கான பங்களிப்பினை எடுத்துக்காட்டி வருங்கால தலைமுறை தலைநிமிர்ந்து செயலாற்ற இந்த நூலில் பல்வேறு மாற்றுச் சிந்தனைகளை பதிவு செய்து உள்ளார்.
உலகின் முதன் மொழி தமிழ்
முதல் மாந்தன் தமிழன்
என்ற பாவாணரின் வரிகளுக்கு ஆக்கம் தேடுவதுதான் இந்த நூலாசிரியரின் பணியாக அமைந்துள்ளது.
🌱 தமிழனின் படிப்படியான வீழ்ச்சி
🌱 நிறம் மாறும் தமிழனின் விழாக்கள்
🌱 சுதிமாறும் இசை
🌱 பிறமொழியாகும் பெயர்கள்
🌱 தமிழைப் புறக்கணிக்கும் தமிழ் நிறுவனங்கள்
🌱 தன்மானம் இழக்கும் தமிழர்கள்
🌱 தமிழைப் புறந்தள்ளும் தமிழர்கள்
🌱 தமிழ்க் கொலை நடத்தும் எழுத்துக்கள்
🌱 குடியால் மடியும் தமிழ்க் குடிகள்
🌱 சாதிவெறி, பண்பாட்டுச் சிதைவுகள்
எனப் பல்வேறு கருத்தியல்களை மையப்படுத்தி சமுதாய அக்கறையோடு இந்நூல் உருவாக்கியுள்ளார்.
இவர் அறிவுக்கன்பன் மட்டுமல்ல
பகுத்தறிவிற்கு நண்பன் எனலாம்.
🌳இவர் ஏற்கனவே படைத்த ஒவ்வொரு நூலின் தலைப்பும் மாற்றுச் சிந்தனைக்கும் மரபின் மீறலுக்கும் சரியானச் சான்றுகளாகும்.
இவரது படைப்பும், விடாமுயற்சியும்
இளைய உள்ளங்களுக்கு முன்மாதிரி
இவரது படைப்பைத் தமிழுலகம்
படித்து பயன் பெற வேண்டும்
தமிழன் என்று சொல்லி
தலை நிமிர வேண்டும்
வாழ்த்துக்கள்!
உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்.....

நூல் அறிமுகம் – 05

இருபதாம் நூற்றாண்டுக் குழந்தைப் பாடல்கள்

✒️ முனைவர் சி.அங்கயற்கண்ணி
📚 காவ்யா
16, இரண்டாவது குறுக்கு வீதி
கோடம்பாக்கம் சென்னை – 600024.
🙏📖🙏📖🙏📖🙏
நிற்கையில் நிமிர்ந்துநில்
கற்பதில் முதன்மை கொள்
காண்பதைத் தெரிந்து கொள்
சித்திரம் பயின்று வா
– பாவேந்தர்-
குழந்தைப் பாடல்களின் வருகையென்பது 20ஆம் நூற்றாண்டின் தொடக்கம். அத்தகைய குழந்தைப் பாடல்களில் ஒலிநயத்திற்கு முக்கியத்துவம் தந்து படைப்பதுச் சிறப்பு. சில சொற்களே திரும்பத்திரும்ப வரவேண்டும் என்பார் மு.வ.
🌳 குழந்தைகளுக்கு எழுதுபவர்கள் வருங்கால நல்வாழ்க்கைக்கும், நல்ல சமுதாயத்தை உருவாக்கவும் எழுதுகிறார்கள் எனலாம்.
🌳குழந்தைகளின் உள்ளங்களைப் பக்குவப்படுத்துவும், நல்வழிகாட்டுவதற்கும் ஒரு தூண்டுகோலாக பாடல்கள் அமைந்தால் நலம் பயக்கும்.
🌳வளரும் குழந்தைகளின் உள்ளத்தில் பதியுமாறு நல்ல கருத்துக்களையும் பழக்கங்கள், நமது மொழியின் இன்றியமையாயையும், பண்பாட்டுக் கூறுகளை எடுத்துக் கூறுவது இன்றையத் தேவையாகும்.
🌳 இருபதாம் நூற்றாண்டுக் குழந்தைப் பாடல்கள் எனும் தலைப்பில் நான்கு அமைந்த இந்த நூல்
🌴 குழந்தை கவிஞர்களின் இலக்கியக் கொள்கைகள்
🌴 மொழிநடையும் இலக்கிய நயமும்
🌴 குழந்தைப் பாடல்களின் தேவை – அவசியம்
🌴 கவிஞர்களின் தம் படைப்புகளில் குழந்தைப் பாடல்கள்
என்னும் நான்கு தலைப்புகளில் அமைந்து எளிய நடையில் விளங்குவது இந்த நூலின் மற்றொரு சிறப்பாகும்..
வாழ்த்துக்கள்!
உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்.....

நூல் அறிமுகம் – 04

பெரியாரைப் பேணிக் கொளல்
✒️ முனைவா ம.பிரகாஷ்
📚 காவ்யா
16, இரண்டாவது குறுக்கு வீதி
கோடம்பாக்கம் சென்னை – 600024.
🙏📖🙏📖🙏📖🙏📖
திராவிட இயக்கத்தின் வயது 100 ஆண்டுகளைத் தொட்டாலும் யாரைத் தீண்டக்கூடாது என்று சொன்னார்களோ அவர்களுக்கான இந்த இயக்கம் என்றும் நமக்குத் தேவையான ஒன்றாகவே உள்ளது.
சாதித் சனியும் தமிழ்ப் பகையும் இல்லாத
ஆதித் தமிழ்நாட்டை அடைவோம் நீ கண்ணுறங்கே
என்று தாலாட்டுப் பாடலைப் பாடிய வாணிதாசனின் பாடலைத் தொடர்ந்து பாட வேண்டும்.
🌳 மக்களுடைய கடவுள் நம்பிக்கை, சமயப்பற்று, மூடப்பழக்க வழக்கங்கள் ஆகியவைகளுக்குப் பகுத்தறிவின்மையே காரணம் என்று பெரியார் கருதினார்.
🌳 பெரியார் தனக்கு முன்மாதிரி என்று யாரும் இல்லாத சுயசிந்தனையாளராக விளங்கியுள்ளார். அவர் மேற்கொண்ட பகுத்தறிவுப் பணி எப்படிப்பட்ட கருத்துக்களாலும் ஏன்? எதற்கு? எப்படி? என்று கேள்வி கேட்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
🌳 பெரியாரைப் பேணிக் கொளல் என்ற இந்த நூல் பெரியார் குறித்து பல்வேறு அறிஞர்கள், ஆர்வலர்கள் பன்நோக்கில் கருத்துக்களை 25 கட்டுரைகளில் வழங்கியுள்ளனர்..! வாழ்த்துக்கள்…

உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்.....

நூல் அறிமுகம் – 03

 

 

 

 

 

 

 

 

திராவிட இயக்க மறுமலர்ச்சிச் சிந்தனைகள்

முனைவர் அ.குருமூர்த்தி

காவ்யா
16, இரண்டாவது குறுக்கு வீதி
கோடம்பாக்கம் சென்னை – 600024.

நாட்டில் இனவேறுபாடும், மத வேறுபாடும் மேலோங்கி வளர்ந்து வரும் இந்நாளில் திராவிடம் குறித்த விழிப்புணர்வு அந்த இயக்கம் ஆற்றிய நூற்றாண்டு சாதனைகளைத் தமிழ் உலகுக்கு எடுத்துச் செல்லும், சொல்லும் அரும்பெரும் பணியை இளைஞர்கள் ஆற்ற வேண்டியது மிகவும் அத்தியாவசியம்.
🖋️ தந்தை பெரியாரின் எழுத்துக்களை மட்டுமெ முதன்மை ஆதாரமாகக் கொண்டு இந்நூலை உருவாக்கியிருக்கிறார் மாணவர் அ.குருமூர்த்தி
🖋️ பார்ப்பணியத்தைப் பெரியார் எதிர்ப்பதால் தான் இணைய சமுதாயம் பெரியாரின் எழுத்துக்களைத் தேடித் தேடி வாசிக்கிறது.
🌳 திராவிட இயக்கம் – சமூக மறுமலர்ச்சியின் பின்புலம்
🌳 மொழி, கலை, இலக்கியம் குறித்த சிந்தனைகள்
🌳 பெரியாரின் சமூகவியல் கோட்பாடுகள்
🌳 சமுதாய மறுமலாச்சி சிந்தகைள் வழி வெளிப்படும் தீர்வுகள்
நான்கு தலைப்புகளின் நூறாண்டு இயக்கப் பணிகளையும், சாதனைகளையும் விவரிக்கிறார்.! வாழ்த்துக்கள்…

உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்.....

நூல் அறிமுகம் -02

திராவிடச் சாதி

முனைவர் செ.சதீஸ்குமார்

காவ்யா
16, இரண்டாவது குறுக்கு வீதி
கோடம்பாக்கம்
சென்னை – 600024.

ஒரு சமுதாயம் விழிப்புணர்ச்சிப் பெற்று மறுமலர்ச்சியோடு நடை பயில கலை, இலக்கியங்களைம், திரைத்துறை நாடகம் மற்றும் இதழ்களையும் பயன்படுத்த வேண்டும். இதனைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டது திராவிட இயக்கம். தங்களின் படைப்புக்களில் பகுத்தறிவுக் கருத்தாடல்களையும், தமிழின் தொன்மை, மற்றும் பெருமை, சிறப்புக்களை எடுத்தாண்டனர் ஆயிரக் கணக்கான கவிஞர்கள். சிற்றிதழ்களில் மூலம் கட்டுரைகளைத் தீட்டினர். திராவிட இயக்க பொங்கல் விழா மலர்களில் வெளிவந்துள்ள கட்டுரைகள் கருவூலங்கள் எனலாம். இன்னொரு பக்கம் புதினங்கள், நாடகங்கள், திரைப்படங்கள் தமிழ்ச் சமுதாயத்தை மாற்றிக் காட்டின. இத்தகைய இயக்கத்தின் கலை இலக்கிய வரலாற்றை, இருபதாம் நூற்றாண்டு அரசியல் பண்பாடு திராவிட இயக்கக் கலை வடிவங்கள் திராவிட இயக்க இலக்கிய வடிவங்கள் வழிபடும் திராவிடக் கருத்தியல் எனும் நான்கு தலைப்புகளில் விரிவாக பேசுகிறார். 1925 முதல் 1950 வரையிலான காலக்கட்ட திராவிட இயக்கக் கலை இலக்கியப் பதிவுகளைத் திறம்பட பதிவு செய்துள்ளார் ஆசிரியர் செ.சதீஸ்குமார் வாழ்த்துக்கள்.

உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்.....